தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘தேவரா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கொரட்டாலா சிவா இயக்குகிறார்.
இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் நடிக்கிறார். இதற்கு அனிருத் இசையமைக்கிறார், ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
தற்போது, இந்த படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், முதல் பாகம் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் 5-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
#Devara will be released in two parts, with the first part scheduled for release on April 5, 2024. @tarak9999 #KoratalaSiva #SaifAliKhan #JanhviKapoor @anirudhofficial @sabucyril @sreekar_prasad @Yugandhart_ @YuvasudhaArts @DevaraMovie pic.twitter.com/SpOBSnx0pL
— NTR Arts (@NTRArtsOfficial) October 4, 2023