தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘தேவரா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கொரட்டாலா சிவா இயக்குகிறார்.
இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் நடிக்கிறார். இதற்கு அனிருத் இசையமைக்கிறார், ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில், இப்படத்தின் GLIMPSE-ஐ ரிலீஸ் செய்தனர். இந்த GLIMPSE ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.
முதலில் இந்த படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், முதல் பாகம் வருகிற ஏப்ரல் 5-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது, முதல் பாகத்தின் ரிலீஸை அக்டோபர் 10-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.