தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘தேவரா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கொரட்டாலா சிவா இயக்குகிறார்.
இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் நடிக்கிறார். இதற்கு அனிருத் இசையமைக்கிறார், ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் 5-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று நடிகர் சயிஃப் அலிகானின் பர்த்டே ஸ்பெஷலாக அவரின் கேரக்டர் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.