தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இப்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘தேவரா’. இரண்டு பாகங்களாக தயாராகும் இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கொரட்டாலா சிவா இயக்குகிறார்.
இதில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் நடிக்கிறார். இதற்கு அனிருத் இசையமைக்கிறார், ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில், இப்படத்தின் GLIMPSE-ஐ ரிலீஸ் செய்தனர். இந்த GLIMPSE ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.
இதன் முதல் பாகத்தை இந்த ஆண்டு (2024) அக்டோபர் 10-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்துக்காக நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ரூ.60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.