சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…
1.மாவீரன் :
சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மாவீரன்’ படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் வரும் ஒரு ஸ்பெஷல் வாய்ஸ் ஓவருக்கு முன்னணி நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.
இதனை ‘சாந்தி டாக்கீஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை நாளை (ஜூலை 14-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
2.பாபா பிளாக் ஷீப் :
இயக்குநர் ராஜ்மோகன் ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ‘பாபா பிளாக் ஷீப்’. இந்த படத்தில் RJ விக்னேஷ்காந்த், அம்மு அபிராமி, அப்துல் அயாஸ், நரேந்திர பிரசாத், சுப்பு பஞ்சு, அபிராமி, போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதனை ‘ரோமியோ பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ராகுல் தயாரித்துள்ளார். இதற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார், சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட இதன் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை நாளை (ஜூலை 14-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
3.நேற்று நான் இன்று நீ :
இயக்குநர் பி.நித்யானந்தம் இயக்கியுள்ள படம் ‘நேற்று நான் இன்று நீ’. இந்த படத்தில் ஆதித், வினிதா, அரவிந்த்ராஜ், பாட்ஷா, வினு ப்ரியா, தமீம் மற்றும் பலர் மிக முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.
இதற்கு ஜெகன் கல்யாண் இசையமைத்துள்ளார், ஈ.ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜோன்ஸ் பெர்னாண்டோ படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார், முல்லை செல்வராஜ் வசனம் எழுதியுள்ளார்.
இதனை ‘அப்பா டாக்கீஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை நாளை (ஜூலை 14-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.