சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…
1.கொலை :
விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘கொலை’. இந்த படத்தை ‘விடியும் முன்’ புகழ் இயக்குநர் பாலாஜி.கே.குமார் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ரித்திகா சிங், மீனாக்ஷி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா, சித்தார்த்தா ஷங்கர், கிஷோர் குமார், ஜான் விஜய், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை நாளை (ஜூலை 21-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
2.அநீதி :
அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘அநீதி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் துஷாரா விஜயன், வனிதா விஜயக்குமார், காளி வெங்கட், அறந்தாங்கி நிஷா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை நாளை (ஜூலை 21-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
3.சத்திய சோதனை :
பிரேம்ஜி அமரன் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘சத்திய சோதனை’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஸ்வயம் சித்தா, ரேஷ்மா, கே.ஜி.மோகன், செல்வமுருகன், லக்ஷ்மி, ஹரிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை நாளை (ஜூலை 21-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
4. எக்கோ :
ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘எக்கோ’. இந்த படத்தை இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஆஷிஷ் வித்யார்த்தி, வித்யா பிரதீப், பூஜா ஜாவேரி, காளி வெங்கட், கும்கி அஷ்வின், டெல்லி கணேஷ், பிரவீனா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை நாளை (ஜூலை 21-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
5.இராக்கதன் :
வம்சி கிருஷ்ணா ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இராக்கதன்’. இந்த படத்தை இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ரியாஸ் கான், விக்னேஷ் பாஸ்கர், காயத்ரி ரெமா, சாம்ஸ், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை நாளை (ஜூலை 21-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.