இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகும் தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • June 13, 2023 / 08:02 PM IST

சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகும் தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…

1.ஃபர்ஹானா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தமிழில் ‘மோகன் தாஸ், துருவ நட்சத்திரம், தீயவர் குலைகள் நடுங்க, இடம் பொருள் ஏவல், ஃபர்ஹானா’ என 5 படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘ஃபர்ஹானா’ படம் கடந்த மே 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல், செல்வராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், VJ சாபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை வருகிற ஜூன் 16-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’-வில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

2.இராவண கோட்டம் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷாந்தனு பாக்யராஜ். இவர் ஹீரோவாக நடித்த ‘இராவண கோட்டம்’ கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். இதில் ஷாந்தனுவிற்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரபு, தீபா ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படத்தை வருகிற ஜூன் 16-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

3.பிச்சைக்காரன் 2 :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2, அக்னிச் சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘பிச்சைக்காரன் 2’ கடந்த மே 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்ததுடன், அவரே இப்படத்தை தயாரித்து, இசையமைத்து, இயக்கியுள்ளார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் காவ்யா தபார், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், ராதாரவி, மன்சூர் அலிகான், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை வருகிற ஜூன் 17-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’-ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

4.தமிழரசன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘தமிழரசன்’ கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், சங்கீதா, ராதா ரவி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளார், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை வருகிற ஜூன் 16-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜீ5’-ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus