சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் OTT-யில் ரிலீஸாகியுள்ள தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…
1.கழுவேத்தி மூர்க்கன் :
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அருள்நிதி. இவர் நடித்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் கடந்த மே 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை இயக்குநர் சை.கெளதமராஜ் இயக்கியுள்ளார். இதில் அருள்நிதிக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதஸ்வா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு டி.இமான் இசையமைத்துள்ளார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார், நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஒலிம்பியா மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இப்படம் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’ல் வெளியாகியிருக்கிறது.
2.காசேதான் கடவுளடா :
1972-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் ‘காசேதான் கடவுளடா’. இந்த படத்தில் ஹீரோவாக முத்துராமன் நடித்திருந்தார். சித்ராலயா கோபு இயக்கியிருந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது.
இப்படத்தின் ரீமேக் வெர்ஷனில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடித்துள்ளார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, ஊர்வசி, VTV கணேஷ், கருணாகரன், மனோபாலா, புகழ், ஷிவாங்கி, தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் பிரபல OTT தளமான ‘சன் நெக்ஸ்ட்’ல் வெளியாகியிருக்கிறது.
3.தீராக் காதல் :
தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெய். இவர் நடித்த ‘தீராக் காதல்’ திரைப்படம் கடந்த மே 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இதற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார், ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படம் பிரபல OTT தளமான ‘நெட்ஃபிளிக்ஸ்’ல் வெளியாகியிருக்கிறது.
4.கருங்காப்பியம் :
திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடித்த ‘கருங்காப்பியம்’ திரைப்படம் கடந்த மே 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான டி.கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இதில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடிகைகள் ரெஜினா, ஜனனி அய்யர் இருவரும் நடித்துள்ளார்கள்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் கலையரசன், யோகி பாபு, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் பிரபல OTT தளமான ‘சிம்ப்ளி சவுத்’ல் வெளியாகியிருக்கிறது.