சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோ, ஹீரோயினுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ஹீரோஸ் & ஹீரோயின்ஸ் நடித்து வருகிறார்கள். இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸாகப்போகும் படங்களின் லிஸ்ட் இதோ…
1.மாமன்னன் :
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மாமன்னன்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், ரவீனா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை நாளை (ஜூன் 29-ஆம் தேதி) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
2.ஸ்பை :
நடிகர் நிகில் சித்தார்த்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஸ்பை’. இந்த படத்தை கேரி.பி.ஹெச் இயக்கியுள்ளார். இதில் முக்கிய ரோல்களில் ஐஸ்வர்யா மேனன், சன்யா தாகூர், அபினவ் கோமதம், ஆர்யன் ராஜேஷ், மகரந்த் தேஷ்பாண்டே, சச்சின் கெடேகர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், கெஸ்ட் ரோலில் ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபதி நடித்துள்ளார். இப்படத்தை நாளை (ஜூன் 29-ஆம் தேதி) ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
3.கபடி ப்ரோ :
இயக்குநர் சதீஷ் ஜெயராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கபடி ப்ரோ’. இதில் முக்கிய ரோல்களில் சுஜன், ப்ரியா லால், சிங்கம் புலி, சஞ்சய் வெள்ளங்கி, மதுசூதன ராவ், மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஜூன் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
4.சால்மன் 3D :
பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘சால்மன் 3D’. இந்த படத்தை இயக்குநர் ஷாலில் கல்லூர் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ராஜீவ் கோவிந்தா பிள்ளை, ஷியாஸ் கரீம், பஷீர் பாஷி, ஜபீர் முகமது, ஜோனிடா, நேஹா, மீனாக்ஷி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஜூன் 30-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.