சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவருக்கு அமைந்த முதல் தமிழ் படமே டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் தான் அமைந்தது. அந்த படம் தான் ‘இருவர்’. இதில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் தான் கதையின் நாயகனாக நடித்திருந்தார்.
‘இருவர்’ படத்துக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் 1 & 2’ என தமிழ் படங்கள் குவிந்தது. ஐஸ்வர்யா ராய் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
தற்போது, ஐஸ்வர்யா ராய் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2005-யில் ரிலீஸான தமிழ் படம் ‘சந்திரமுகி’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பி.வாசு இயக்க, ஹீரோவாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
இதில் டைட்டில் ரோலில் ஜோதிகா நடித்திருந்தார். முதலில் இந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென பி.வாசு ஐஸ்வர்யா ராயை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் ஐஸ்வர்யாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.