சிம்ரன் நடிக்கவிருந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்த ஜோதிகா

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி . இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகை ஜோதிகா . வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . பிரபு , கே.ஆர்.விஜயா , மாளவிகா , நயன்தாரா , வடிவேலு , நாசர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் . இந்த படத்தை நடிகர் பிரபுவின் அண்ணன் ராம்குஅமர் தயாரித்து இருந்தார் .

2005-ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டிற்கு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருந்தது .ரஜினியின் வேட்டையன் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது . மேலும் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகளும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது . இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது சந்திரமுகி கதாபாத்திரம் தான் . இந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகை ஜோதிகா .

ஜோதிகா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக படத்தின் இயக்குனர் வாசு வேறு சில நடிகைகளை இந்த படத்தில் நடிக்க வைக்க முயன்றார் . முதலில் நடிகை சௌந்தர்யா இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார் வாசு ஆனால் அந்த சமயத்தில் தான் நடிகை சௌந்தர்யா இறந்து போனார் பிறகு பிறகு நடிகை சிம்ரனை நடிக்க வைக்க முயன்றார் ஆனால் சிம்ரன் அப்பொழுது கர்ப்பமாக இருந்ததால் நடிக்க மறுத்துவிட்டார் . பின்பு நடிகை சதா, ரீமாசென் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர் . இறுதியாக ஜோதிகா இந்த கதையில் நடித்து அனைவரையும் அசத்தி இருந்தார் .

மேலும் படப்பிடிப்பின் பொது ஜோதிகாவின் நடிப்பை பார்த்து அசந்து போனதாக ரஜினி அவர்களே ஒரு மேடையில் குறிப்பிட்டு இருந்தார் .

Share.