வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஜோதிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?
March 14, 2023 / 09:54 AM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் வரலக்ஷ்மி சரத்குமார். பாப்புலர் ஹீரோ சரத்குமாரின் மகளாக இருந்தும் திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சிலம்பரசனுடன் தான்.
அது தான் ‘போடா போடி’. அந்த படத்துக்கு பிறகு நடிகை வரலக்ஷ்மி சரத்குமாருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, Mr. சந்திரமௌலி, எச்சரிக்கை, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, வெல்வெட் நகரம், டேனி, கன்னி ராசி, இரவின் நிழல், காட்டேரி, யசோதா, மைக்கேல்’ என படங்கள் குவிந்தது.
வரலக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், வரலக்ஷ்மி நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
2003-யில் ரிலீஸான தமிழ் படம் ‘காக்க காக்க’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்க, ஹீரோவாக சூர்யா நடித்திருந்தார். இதில் ஹீரோயினாக ஜோதிகா நடித்திருந்தார். முதலில் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டுமென கெளதம் மேனன் வரலக்ஷ்மியை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் வரலக்ஷ்மியால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.