வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஜோதிகா… வைரலாகும் வீடியோ!

  • April 29, 2023 / 10:33 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. இவர் கெஸ்ட் ரோலில் வந்த முதல் படமான ‘வாலி’-யிலேயே ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். அதன் பிறகு ஜோதிகாவின் கால்ஷீட் டைரியில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, குஷி, ரிதம், தெனாலி, டும் டும் டும்’ என படங்கள் குவிந்தது.

பின், பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியானார். ’36 வயதினிலே’ படம் ஹிட்டானதும் மறுபடியும் ஜோதிகா செம பிஸியான நடிகையாக மாறி விட்டார்.

இப்போது ஜோதிகா கைவசம் ‘காதல்’ என்ற மலையாள படமும், ‘ஸ்ரீ’ என்ற ஹிந்தி படமும் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus