ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘காதல் கண்மணி’ பாடல்!

  • December 10, 2020 / 09:41 PM IST

தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது. இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘பேச்சலர்’ எனும் படத்தை சதீஷ் செல்வக்குமார் இயக்க, ஹீரோயினாக திவ்யபாரதி நடிக்கிறார். ஜெட் ஸ்பீடில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்து வரும் இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘காதல் கண்மணி’யை இயக்குநர்கள் கெளதம் மேனனும், வெங்கட் பிரபுவும் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளனர்.

இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ரசிகர்களின் ப்ளேலிஸ்டிலும் இடம்பிடித்துள்ளது. நிதிஷ் என்பவர் எழுதியுள்ள இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் குமாரும், பிரபல பின்னணி பாடகி சுவாகதா. எஸ். கிருஷ்ணனும் இணைந்து பாடியுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus