இயக்குநராகவும் , நடிகராகவும் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் எம்.சசிகுமார். இவர் சேது திரைப்படத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார், பிறகு மேலும் இயக்குனர் அமீர் தனது முதல் இரண்டு படங்களான மௌனம் பேசியதே மற்றும் ராம் ஆகிய படங்களில் பணியாற்றினார். 2008 -ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் .
சசிகுமார் தற்போது பகைவனுக்கு அருள்வாய் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் . இந்நிலையில் சசிகுமார் நடிப்பில் ‘காரி’ படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . இந்த படத்தை இயக்குநர் ஹேமந்த் இயக்கியுள்ளார். படத்தின் நாயகியாக பார்வதி அருண் நடித்து இருக்கிறார்.
அம்மு அபிராமி, ஆடுகளம் நரேன், பாலாஜி சக்திவேல், JD.சக்கரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட நடிகர்கள் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் . தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான இமான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நவம்பர் 25-ஆம் தேதி வெளியான இந்த படம் வெளியான 5 நாட்களில் 2.51 கோடி வசூல் செய்து உள்ளது என்று கூறப்படுகிறது .