திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘காதலில் விழுந்தேன்’ ஹீரோயின் சுனைனா… வருத்தத்தில் ரசிகர்கள்!
October 21, 2023 / 01:56 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சுனைனா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘காதலில் விழுந்தேன்’. அதற்கு மிக முக்கிய காரணம் அப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டாகி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்தது. ‘காதலில் விழுந்தேன்’ படத்துக்கு பிறகு நடிகை சுனைனாவுக்கு அடித்தது ஜாக்பாட்.
அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம், நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக் கருப்பட்டி, ட்ரிப், ரெஜினா’ என படங்கள் குவிந்தது.
நடிகை சுனைனா தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்டில்ஸை ஷேர் செய்ததுடன் “எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் விரைவில் மீண்டு வருவேன்” என்று பதிவிட்டுள்ளார்.