சூப்பர் ஹிட் கொடுத்த 2 மலையாள இயக்குநர்களுடன் கூட்டணி அமைக்கும் ‘கைதி’ வில்லன்!
ஒரு வில்லன் நடிகருக்கு இவ்ளோ ஃபேன்ஸா என்று ஆச்சர்யப்பட வைத்தவர் அர்ஜுன் தாஸ். இவர் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டிய படம் ‘கைதி’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது.
இப்போது நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் ‘மாஸ்டர், அந்தகாரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்த இரண்டு படங்களுமே ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறது. இதில் ‘அந்தகாரம்’ OTT-யிலும், ‘மாஸ்டர்’ தியேட்டரிலும் ரிலீஸாகுமாம். இந்நிலையில், நடிகர் அர்ஜுன் தாஸின் கால்ஷீட் டைரியில் ஒரு புதிய தமிழ் படம் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனை ‘டிரான்ஸ்’ எனும் மலையாள பட இயக்குநர் அன்வர் ரஸீத் இயக்கவுள்ளார். அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கவுள்ள இந்த படத்திற்கான ஸ்க்ரிப்ட்டை ‘அஞ்சாம் பாதிரா’ எனும் மலையாள பட இயக்குநர் மிதுன் மேனுவேல் தாமஸ் எழுதி உள்ளாராம்.