‘கைதி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘போலா’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • March 28, 2023 / 04:28 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவரின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கைதி’. இந்த படத்தில் முக்கிய ரோல்களில் நரேன், அர்ஜுன் தாஸ் நடிக்க, டாப் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் இதனை இயக்கியிருந்தார்.

இதில் கார்த்தி ‘டில்லி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இந்த படம் உலக அளவில் ரூ.104 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

தற்போது, இந்த படம் ஹிந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை அஜய் தேவ்கன் இயக்கியதுடன், அவரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். மேலும், அமலா பால், தபு, சஞ்சய் மிஷ்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற மார்ச் 30-ஆம் தேதி 3D-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ட்விட்டரில் பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus