லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி 2019 ஆம் ஆண்டு வெளியான அதிரடி திரில்லர் திரைப்படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தை விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் . அவர்களுடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் மற்றும் தீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர் .
கைதி படம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக 25 அக்டோபர் 2019 அன்று வெளியிடப்பட்டது. இது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல பாராட்டைப் பெற்றது. இதன் காரணமாக கைதி படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது, ₹110 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆகஸ்ட் 2020 இல் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழா டொராண்டோவில் (IIFFT) அதிகாரப்பூர்வ திரையிடலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது .
இந்நிலையில் கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் வாங்கினார் . இந்த படத்தை இந்தி மொழியில் அவரே தயாரித்து , இயக்கி நடித்துள்ளார் . மேலும் இந்த படம் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ளது .தற்போது இந்த படத்தின் இரண்டாவது டீஸர் வெளியாகி தமிழ் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .