என்ன அழகா குதிரையில் சவாரி செய்றாங்க காஜல் !

  • September 21, 2022 / 08:23 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஜல் அகர்வால் . இவர் 2008 -ஆம் ஆண்டு வெளியான பழனி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தை பேரரசு இயக்கி இருந்தார் . இதன் பிறகு சில படங்களில் இவர் நடித்து இருந்தாலும் காஜல் அகர்வாலை ரசிகர்களிடம் பிரபலமாக்கிய படம் மகதீரா . தெலுங்கு திரை உலகில் இந்த படம் பெரிய வெற்றியை அடைந்தது . இதனை தொடர்ந்து தமிழில் இவருக்கு மிக பெரிய வெற்றி அடைந்த படமாக நான் மகான் அல்ல படம் அமைந்தது .

அதன் பிறகு நடிகர் சூர்யாவுடன் மாற்றான் படத்திலும் நடிகர் விஜய்யுடன் துப்பாக்கி படத்திலும் நடித்து நட்சத்திர நடிகையாக மாறினார் . இந்நிலையில் லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வந்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு நின்ற பிறகு காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடந்து குழந்தை பிறந்து உள்ளது . இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்து இருந்தது . இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பதை உறுதி செய்து இருந்தார் .

இந்நிலையில் நடிகை காஜல் இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படம் மற்றும் பதிவிடுவார் . அந்த வகையில் தற்போது இவர் குதிரையில் சவாரி செய்யும் வீடியோவை பகிர்ந்து உள்ளார் . திருமணம் மற்றும் பிரசவத்திற்கு புதிதாக குதிரை சவாரி பழகுவது அவர் தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus