விரைவில் தன் அடுத்த பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் காஜல் அகர்வால்!

  • November 1, 2020 / 11:31 AM IST

இந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.

2004 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் கால் பதித்த காஜல் அகர்வால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால் பெரிய அளவில் முதலில் புகழ் பெறாவிட்டாலும், பிறகு நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தார்.

சமீபத்தில் தொழிலதிபரான கௌதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொள்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகை காஜல்அகர்வால்.

தற்போது காஜல் அகர்வாலுக்கு திருமணம் இனிதே நடந்தேறியது. இதைத் தொடர்ந்து விரைவில் காஜல்அகர்வால் தன் அடுத்த படமான ‘ஹே சினாமிகா’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவல் வந்துள்ளது. கல்யாணத்துக்கு பின் காஜல் அகர்வால் கலந்து கொள்ளவுள்ள முதல் படப்பிடிப்பு இதுதான். இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus