இந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.
2004 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் கால் பதித்த காஜல் அகர்வால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால் பெரிய அளவில் முதலில் புகழ் பெறாவிட்டாலும், பிறகு நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தார்.
தற்போது இவர் தன்னுடைய திருமண செய்து குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இவர்தான் தன் மணமகன் என்றும் குறிப்பிட்டுள்ளார். கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை மணக்கவுள்ளார் காஜல் அகர்வால்.
மும்பையில் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கவிருந்த இவரது திருமணம் தற்போது மிகவும் சிம்பிளாக மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடக்கவுள்ளதாகவும், கொரோனோ பரவல் அதிகமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே சூழ மிகவும் சிம்பிளான முறையில் காஜலின் திருமணம் நடக்க உள்ளதாம்.