கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த காஜல் அகர்வால்… வைரலாகும் புகைப்படம்!
May 13, 2023 / 11:52 PM IST
|Follow Us
திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவர் நடித்த ‘பழனி, பொம்மலாட்டம், மோதி விளையாடு’ ஆகிய தமிழ் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு ‘நான் மகான் அல்ல’ என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக வலம் வந்தார் காஜல் அகர்வால். சுசீந்திரன் இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட்டானது.
‘நான் மகான் அல்ல’ ஹிட்டிற்கு பிறகு நடிகை காஜல் அகர்வாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாற்றான், துப்பாக்கி, அழகு ராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல், கோமாளி’ என படங்கள் குவிந்தது. தமிழ் மொழி படங்கள் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் காஜல் அகர்வால்.
இப்போது காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கருங்காப்பியம்’, ஹிந்தியில் ‘உமா’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கெளதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.
கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் 19-ஆம் தேதி கெளதம் கிச்லு – காஜல் அகர்வால் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில், இக்குழந்தைக்கு ‘நீல் கிச்லு’ (NEIL KITCHLU) என பெயர் சூட்டினார்கள். இந்நிலையில், காஜல் அகர்வால் தனது கணவர் கெளதம் கிச்லுக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.