தன் திருமணத்தை தள்ளி வைத்துள்ள காஜல் அகர்வால்!

  • September 22, 2020 / 09:54 PM IST

இந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.

2004 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் கால் பதித்த காஜல் அகர்வால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால் பெரிய அளவில் முதலில் புகழ் பெறாவிட்டாலும், பிறகு நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தார்.

இவருக்கு தற்போது திருமணம் நடக்கவிருப்பதாகவும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் செய்தி பரவி வருகிறது. இவர் அதிகாரபூர்வமாக தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் இது வதந்தி என்றும் கூறியுள்ளார். இருப்பினும் இவரது நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் அவரது பெயர் கௌதம் என்றும் மீடியாவிற்கு தெரிய வேண்டாம் என்று இதை அவர்கள் ரகசியமாக பாதுகாத்து வருவதாகவும் ஒரு செய்தி பரவுகிறது.

இருப்பினும் 2020ஆம் வருடம் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்த காஜல் அகர்வால் தற்போது இந்த லாக்டோன் காரணமாக தன் திருமணத்தை தள்ளி வைத்துள்ளதாகவும், விரைவில் திருமணம் குறித்த செய்தியை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus