திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவர் நடித்த ‘பழனி, பொம்மலாட்டம், மோதி விளையாடு’ ஆகிய தமிழ் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு ‘நான் மகான் அல்ல’ என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக வலம் வந்தார் காஜல் அகர்வால். சுசீந்திரன் இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட்டானது.
‘நான் மகான் அல்ல’ ஹிட்டிற்கு பிறகு நடிகை காஜல் அகர்வாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாற்றான், துப்பாக்கி, அழகு ராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல், கோமாளி’ என படங்கள் குவிந்தது. தமிழ் மொழி படங்கள் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் காஜல் அகர்வால்.
இப்போது காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, கருங்காப்பியம்’, ஹிந்தியில் ‘உமா’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கெளதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.
கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கெளதம் கிச்லு – காஜல் அகர்வால் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில், இக்குழந்தைக்கு ‘நீல் கிச்லு’ (NEIL KITCHLU) என பெயர் சூட்டினார்கள். நேற்று முன் தினம் (ஜூன் 19-ஆம் தேதி) நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறியதுடன், மகனுடன் இருக்கும் புது ஸ்டில்லை வெளியிட்டுள்ளார்.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.