மீண்டும் ஒரு படத்திற்கு கமிட்டாகி கலக்கியுள்ளார் காஜல் அகர்வால்!

  • December 7, 2020 / 01:10 PM IST

இந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.

2004 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் கால் பதித்த காஜல் அகர்வால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால் பெரிய அளவில் முதலில் புகழ் பெறாவிட்டாலும், பிறகு நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தார்.

சமீபத்தில் கௌதம் கிச்லு என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தேறியது. சமீபத்தில் தன் கணவருடன் ஹனிமூன் சென்ற இவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் இவர் காட்டேரி புகழ் இயக்குனர் டீகேவுடன் இணைந்து ஒரு மல்டி ஸ்டார்டர் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து மீண்டும் காஜல் அகர்வால் தன் அடுத்த தமிழ் படத்தில் கையெழுத்திட்டுள்ளாராம்.

திருமணத்திற்குப் பின் இவர் ஒப்பந்தமாகி உள்ள முதல் திரைப்படம் இது. ஜாக்பாட் மற்றும் குலேபகாவலி ஆகிய படங்களின் இயக்குனரான கல்யாணுடன் இணைந்து இவர் “கோஸ்டி” என்ற ஹாரர் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. கல்யாணத்திற்குப் பின் காஜல் மிகவும் பிஸியாக மாறிவிட்டார் என்று திரைப்பட வட்டாரம் பேசி வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, ஸ்ரீமன், தேவதர்ஷினி போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், ஒரு முக்கியமான பெரிய ஹீரோவை கெஸ்ட் ரோலில் இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus