அடேங்கப்பா… 4 நாட்களில் காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ செய்த வசூல் இவ்ளோவா?

  • March 21, 2023 / 09:19 PM IST

திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, கருங்காப்பியம்’, ஹிந்தியில் ‘உமா’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘கோஸ்டி’ திரைப்படம் கடந்த மார்ச் 17-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, சத்யன், ஆடுகளம் நரேன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி, சுரேஷ் மேனன், சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார், ஜேக்கப் ரத்தினராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, கடந்த 4 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.1.21 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus