காஜல் அகர்வாலின் ஹாரர் காமெடி படமான ‘கோஸ்டி’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • March 17, 2023 / 07:15 PM IST

திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, கருங்காப்பியம்’, ஹிந்தியில் ‘உமா’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘கோஸ்டி’ திரைப்படம் இன்று (மார்ச் 17-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, சத்யன், ஆடுகளம் நரேன், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி, சுரேஷ் மேனன், சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு சாம்.சி.எஸ். இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus