காஜல் அகர்வாலின் ‘லைவ் டெலிகாஸ்ட்’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • February 12, 2021 / 04:14 PM IST

திரையுலகில் பாப்புலர் நடிகைககளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா’, தெலுங்கில் ‘மோசகல்லு, ஆச்சார்யா’ மற்றும் ஹிந்தியில் ‘மும்பை சகா’ என ஆறு படங்களும், ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் சீரிஸ் இன்று (பிப்ரவரி 12-ஆம் தேதி) ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ என்ற பிரபல OTT தளத்தில் தமிழ் மொழி மட்டுமில்லாமல் மராத்தி, ஹிந்தி, கன்னடம், பெங்காலி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது. ஹாரர் ஜானரில் தயாராகியுள்ள இதில் மிக முக்கிய ரோல்களில் ‘கயல்’ ஆனந்தியும், வைபவ்வும் நடித்துள்ளனர்.

இதற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார், ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கட் ராஜன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்போது, இவ்வெப் சீரிஸை ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், வெப் சீரிஸ் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus