நடிகை காஜல் அகர்வாலின் அடுத்த திரைப்படம் இந்த இயக்குனருடனா?

  • December 2, 2020 / 08:35 PM IST

இந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார்.

2004 ஆம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் கால் பதித்த காஜல் அகர்வால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால் பெரிய அளவில் முதலில் புகழ் பெறாவிட்டாலும், பிறகு நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாற்றான், ஜில்லா, விவேகம், மெர்சல் போன்ற படங்களில் முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் திரையுலகில் பிடித்தார்.

சமீபத்தில் கௌதம் கிச்லு என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தேறியது. சமீபத்தில் தன் கணவருடன் ஹனிமூன் சென்ற இவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதையொட்டி தற்போது ‘காட்டேரி’ திரைப்படத்தின் இயக்குனர் டீகேவுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் இந்த இயக்குனருடன் இணைந்து இவர் அடுத்து ஒரு ஹாரர் படத்தில் பணி புரிவதற்காகத்தான் இவர்கள் சந்தித்தார்கள் என்ற செய்தியும் பரவி வருகிறது.

ஏற்கனவே ‘இந்தியன் 2’ மற்றும் ‘ஏ சினாமிகா’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் மீண்டும் அடுத்த திரைப்படத்தில் நடிப்பதற்கு தற்போது கமிட்டாகி உள்ளார் என்று செய்தி பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus