‘கலகத் தலைவன்’ பட நடிகை நிதி அகர்வாலின் அசத்தலான போட்டோஷூட்!

  • February 7, 2023 / 11:29 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் நிதி அகர்வால். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த நிதி அகர்வால் தமிழில் இதுவரை மூன்று படங்களில் நடித்திருக்கிறார். அதில் முதல் படம் சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’.

இரண்டாவது படம் ‘ஜெயம்’ ரவி நடித்த ‘பூமி’. மூன்றாவது படம் உதயநிதி ஸ்டாலினின் ‘கலகத் தலைவன்’. இப்படம் கடந்த ஆண்டு (2022) நவம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தை ‘தடம்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார்.

சமீபத்தில், நிதி அகர்வாலின் கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் சென்னையில் இவருக்கு ஒரு கோவில் கட்டி பால் அபிஷேகம் செய்தனர். இப்போது இவர் நடிப்பில் ஒரு தெலுங்கு படம் மட்டும் உருவாகி வருகிறது.

இந்நிலையில், நிதி அகர்வால் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus