சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் காளிதாஸ். பிரபல நடிகர் ஜெயராமின் மகனான இவர் அறிமுகமான முதல் தமிழ் படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’. இந்த படத்தை இயக்குநர் அமுதேஷ்வர் இயக்கியிருந்தார்.
இந்த படத்துக்கு பிறகு காளிதாஸுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘புத்தம் புதுக் காலை, பாவக்கதைகள், ஒரு பக்க கதை, விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது’ என தமிழ் படங்கள் குவிந்தது.
காளிதாஸ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி மலையாள மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, காளிதாஸுக்கும், தாரிணி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.