லோகேஷுக்கு இணையான திறமை வாய்ந்த இயக்குனருடன் கைகோர்க்கும் கமல் !

  • February 9, 2023 / 04:06 PM IST

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் .பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் .

சமீபத்தில் இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு ” ஆர் .ஆர்.ஆர் ” படத்தில் ” நாட்டு நாட்டு ” பாடலுக்கு நடனமைத்த பிரேம் ரக்ஷித் நடனமைக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது .

இது ஒரு பக்கம் இருக்க மணிரத்னம் கமலை வைத்து இயக்கும் கமலின் 234 வது படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது . இந்நிலையில் நடிகர் கமலின் 233 -வது படத்தை யார் இயக்க உள்ளார் என்ற கேள்வி இருந்தது . தற்போது இயக்குநர் வினோத் தான் அந்த படத்தை இயக்க உள்ளார் என்றும் வருகின்ற ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது . இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus