சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் மோகன் லால். இவருக்கு அமைந்த முதல் மலையாள படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’. இந்த படத்தை இயக்குநர் பாசில் இயக்கியிருந்தார். இந்த படத்துக்கு பிறகு மலையாள மொழியில் பல படங்களில் நடித்தார். பின், 1997-ஆம் ஆண்டு வெளியான ‘இருவர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரியானார்.
இந்த படத்தை பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். ‘இருவர்’ படத்துக்கு பிறகு நடிகர் மோகன் லாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பாப் கார்ன், உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான்’ என தமிழ் படங்கள் குவிந்தது. இது தவிர ‘சிறைச்சாலை, அரண்’ போன்ற படங்கள் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியானது. மோகன் லால் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
தற்போது, மோகன்லால் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2006-யில் ரிலீஸான தமிழ் படம் ‘வேட்டையாடு விளையாடு’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்திருந்தார். ஆனால், கெளதம் மேனனின் முதல் சாய்ஸாக இருந்தது மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன் லால் தானாம். பின், சில காரணங்களால் மோகன் லாலால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.