முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு இரங்கல்!

  • September 2, 2020 / 10:42 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் நேற்று உடல்நலக் குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அரசியல் தலைவர்களும் மக்களும் இவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலமானார்.

இவருக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் மக்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து தங்கள் இரங்கலை சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்கள்.

உலக நாயகன் கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “இந்தியாவின் 13 ஆவது ஜனாதிபதியாக வருவதற்கு முன்பே வெளிநாட்டு, பாதுகாப்பு, வர்த்தக மற்றும் நிதி அமைச்சராக இருந்தவர் என்பதும் 50 வருடங்களாக தன் அரசியல் அனுபவத்தில் புகழ் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி, அரசியல் தான் அவரை இழந்துள்ளது” என்று தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் கவிப்பேரரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இது பற்றி குறிப்பிட்டுள்ளதாவது,

பிரணாப் முகர்ஜி மறைவுக்கு
இந்தியா எழுந்து நின்று மெளனிக்கிறது.

உழைப்பில் உறங்காப்புலி இறுதியாய்
உறங்கிவிட்டது.

பாரதத்தின் உயரங்களை வளர்த்தெடுத்த
பாரத ரத்னா விடைகொண்டார்.

போய் வாருங்கள் பிரணாப்!
இந்தியா உங்களை
நீண்டகாலம் நினைக்கும்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus