கமல் ஹாசன் – விஜய் சேதுபதி காம்போவில் உருவாகும் ‘விக்ரம்’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

  • July 8, 2021 / 02:09 PM IST

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’, ஜீத்து ஜோசப்பின் ‘பாபநாசம் 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட ‘விக்ரம்’ டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘கைதி’ அர்ஜுன் தாஸ் – நரேன் ஆகியோர் பவர்ஃபுல்லான வில்லன் ரோல்களில் நடிக்க உள்ளனர்.

Kamal And Vijay Sethupathi's Vikram Update1

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். படத்தை அடுத்த ஆண்டு (2022) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமல் ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியின் லுக் டெஸ்ட் நேற்று (ஜூலை 7-ஆம் தேதி) சென்னையில் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus