“பெருவெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்”… வாழ்த்து தெரிவித்த கமல்!

  • May 3, 2021 / 12:16 PM IST

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது. கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டிருந்தார். நேற்று தேர்தல் முடிவுகள் வெளி வந்தது. இதில் கோவை தெற்கு தொகுதியில் கமலை விட 1500 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக-வை சேர்ந்த வானதி ஸ்ரீநிவாசன் வெற்றி பெற்றார்.

தற்போது, தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்பாக நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் “பெருவெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus