பாதியில் நின்று போன ரஜினி படத்திற்கு பண உதவி செய்த கமல் ! அது எந்த படம் தெரியுமா ?

  • November 15, 2022 / 12:46 AM IST

தமிழ் சினிமாவில் 1978 -ஆம் ஆண்டு வெளியான படம் முள்ளும் மலரும் . இந்த படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மகேந்திரன் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த இந்த படத்தில் சரத் பாபு முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருந்தார் . நடிகை ஜெயலட்சுமி ரஜினிகாந்துக்கு ஜோடியாகவும் மற்றும் நடிகை ஷோபா ரஜினிகாந்துக்கு தங்கையாகவும் நடித்து இருந்தனர் . இந்த படத்திற்கு பாலு மஹிந்திரா ஒளிப்பதிவு செய்து இருந்தார் .

முள்ளும் மலரும் படம் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக பார்க்கப்படுகிறது .
இந்நிலையில் முள்ளும் மலரும் படத்தின் ரஷ் காட்சிகளை பார்த்த படத்தின் தயாரிப்பளார்கள் இயக்குனர் மகேந்திரனிடம் முரண்பட்டு பேசி இருக்கிறார்கள் . மேலும் மீதம் எடுக்கப்பட வேண்டிய சில காட்சிகளை எடுக்க பண உதவியும் செய்ய மறுத்து இருக்கிறார்கள் . அந்த கட்சியை எடுத்தே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் படத்தின் இயக்குனர் மகேந்திரன் இருந்துள்ளார் .

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நடிகர் கமல் தயாரிப்பாளரிடம் பேசி உள்ளார் ஆனால் அதற்கும் தயாரிப்பாளர்கள் செவி சாய்க்கவில்லை . இதனால் நடிகர் கமல்ஹாசன் அவர்களே அந்த காட்சிகளை படமாக்க பண உதவி செய்துள்ளார் . அதன் பிறகு படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி உள்ளது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus