லோகேஷை ஓவர்டேக் செய்த அஜித் பட இயக்குநர் ! முரட்டு சம்பவம் காத்திருக்கு !

  • February 13, 2023 / 11:10 AM IST

விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் .பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் .

சமீபத்தில் இந்தியன் 2 படத்தில் ஒரு பாடலுக்கு ” ஆர் .ஆர்.ஆர் ” படத்தில் ” நாட்டு நாட்டு ” பாடலுக்கு நடனமைத்த பிரேம் ரக்ஷித் நடனமைக்க உள்ளார் என்ற செய்தி வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிகர் கமல் இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் . ராஜ் கமல் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது . இந்நிலையில் இயக்குநர் வினோத்துக்கு அட்வான்ஸாக முன் பணம் தராமல் சொகுசு கார் ஒன்றை கமல் வாங்கி தந்து உள்ளார் .

லோகேஷ் கனகராஜுக்கு விக்ரம் படம் வெற்றி அடைந்த பின் தான் கமல் கார் வாங்கி கொடுத்தார் ஆனால் வினோத்துக்கு படம் தொடுங்கும் முன்னரே கார் வாங்கி கொடுத்தார் கமல் . இதனால் இந்த படமும் பெரிய சம்பவம் செய்யும் என்று நம்பலாம் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus