திருப்பதி செல்லும் கமல் ! என்ன காரணம் தெரியுமா ?

  • December 28, 2022 / 07:00 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் விக்ரம் .இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . நடிகர் சூர்யா விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் . விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல் அடுத்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் .பல பிரச்சனைக்களுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது . நடிகை காஜல் ,ரகுல் ப்ரீத் , ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் இந்த படங்களில் நடித்து வருகின்றனர் . லைக்கா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை தயாரிக்கிறார் .

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வந்தது .இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருப்பதி நடக்க உள்ளது . இதற்காக தற்போது அங்கு செட் பணிகள் நடந்து வருகிறது என்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 22 -ஆம் தேதி நடக்கும் படப்பிடிப்பில் கமல் பங்கேற்க உள்ளார் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus