KH237 : கமல் ஹாசனின் 237-வது படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?… வெளியானது அறிவிப்பு வீடியோ!

  • January 13, 2024 / 10:42 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ 2022-ஆம் ஆண்டு ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2 & 3’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’, இயக்குநர் ஹெச்.வினோத் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கமல் ஹாசனின் 237-வது படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை பிரபல ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவு (அன்புமணி மற்றும் அறிவுமணி) இயக்கவுள்ளனர். இதனை ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் கமலே தயாரிக்கவுள்ளார். இன்று இதன் அறிவிப்பு வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus