சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ இந்த ஆண்டு (2022) ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, செம்பன் வினோத் ஜோஸ் இருவரும் வில்லன் ரோல்களில் நடித்திருந்தார்கள்.
மேலும், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.
தற்போது, கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 2’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் பா.இரஞ்சித் படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் நேற்று இரவு ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய போது லேசான காய்ச்சல் இருந்ததால் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவருக்கு பரிசோதனை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று விட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது. கமல் ஹாசனிடம் இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனராம்.