கமல் ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • August 27, 2022 / 12:16 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இப்போது இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 3’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘இந்தியன் 2’ படத்தில் மிக முக்கிய ரோல்களில் சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைக்கும் இதற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரனுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

இதன் புதிய ஷெட்யூல் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தை அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் 28 அல்லது ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus