சூப்பர் ஹிட்டான படத்தின் பார்ட் 2… கமல்ஹாசனுடன் கூட்டணி அமைக்கும் சிம்பு!

  • September 11, 2020 / 11:14 PM IST

திரையுலகில் ஒரு கலைஞன் தான் செய்ய நினைத்த அனைத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் தான் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர், பாடலாசிரியர், பின்னணி பாடகர் என இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். கமல் ஹாசன் திரையுலகில் சாதித்த விஷயங்களின் லிஸ்ட் மிகப் பெரியது.

இப்போது ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ மற்றும் ‘தலைவன் இருக்கின்றான்’ என இரண்டு திரைப்படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-க்கான ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது.

இந்நிலையில், கமல் ஹாசனின் ரசிகர்களுக்காக ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. 1978-ஆம் ஆண்டு கமல் – இயக்குநர் பாரதிராஜா காம்போவில் வெளியாகி ஹிட்டான படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. இந்த படத்தின் பார்ட் 2-வை பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் இயக்க ப்ளான் போட்டு வருகிறார். இதில் ஹீரோவாக சிம்புவும், மிக முக்கிய ரோலில் கமல் ஹாசனும் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus