1000 ரூபாய் சம்பளம் வாங்கிய ‘உலக நாயகன்’ கமல்ஹாசன்… எந்த படத்துக்கு தெரியுமா?

  • December 22, 2022 / 02:02 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ இந்த ஆண்டு (2022) ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, செம்பன் வினோத் ஜோஸ் இருவரும் வில்லன் ரோல்களில் நடித்திருந்தார்கள்.

மேலும், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

தற்போது, கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம் 2’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் பா.இரஞ்சித் படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கமலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மேல்நாட்டு மருமகள்’. இதில் கமலுடன் இணைந்து சிவக்குமார், ஜெயசுதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை பிரபல இயக்குநர் A.P.நாகராஜன் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிக்க கமல் 1000 ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus