‘கமல்ஹாசன் 233’-ஐ இயக்கும் ஹெச்.வினோத்… படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

  • October 24, 2023 / 11:11 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஆண்டு (2022) ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் ஹெச்.வினோத் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ஹெச்.வினோத் இயக்கும் படம் கமலின் கேரியரில் 233-வது படமாம்.

இதனை கமலே தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ஷூட்டிங்கை வருகிற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்துக்கு ‘தலைவன் இருக்கின்றான்’ என டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus