கமல்ஹாசனுடன் கைகோர்க்கும் சிலம்பரசன்… படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

  • March 3, 2023 / 10:25 AM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பத்து தல’ இந்த படத்தை இயக்குநர் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இந்நிலையில், சிலம்பரசன் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளாராம்.

அதிக பொருட்செலவில் உருவாகப்போகும் இந்த படத்தை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளாராம்.

இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைக்கவுள்ளார். மிக விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus