சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஆண்டு (2022) ரிலீஸானது. இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, செம்பன் வினோத் ஜோஸ் இருவரும் வில்லன் ரோல்களில் நடித்திருந்தார்கள்.
மேலும், மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்திருந்தார்.
இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது. தற்போது, இந்த படம் ‘BETTER CALL SAUL’ என்ற வெப் சீரிஸ் கதையின் காப்பி என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் தட்டிய வண்ணமுள்ளனர்.
என்ன அப்படியே உருவிருக்கான். சுட்லீய விட கஞ்சா யாவாரி பெரிய திருடன் போலயே pic.twitter.com/iiub29xcJo
— L E E (@Leennister) July 12, 2023
Vikram பாத்துட்டு வந்து உடனே இத சொன்ன வெகுசில ஆசாமிகளில் ஒருவன் நானாக இருக்கக் கூடும். என்ன பண்றது? யாருமே கண்டுக்கல https://t.co/XOJYmqkoqy https://t.co/xXHuFTcvHi
— காக்கைச் சித்தர் (@vandavaalam_) July 12, 2023
ஃபேன்பாய் என்கிற பேரில் லோகேஷ் வலிந்து திணிச்ச காட்சிகள். இதோட base story Better Call Saul சீரிஸில் வரும் மைக் என்கிற கேரக்டரோட கதை. அவருடைய பையனும் நேர்மையான போலீஸ், கூட இருக்கும் போலீசாராலே கொல்லப்பட்டுவிடுவார். அதை நினைத்து முழுக்குடியில் இறங்கிவிடுவார் ஆனால் திரைமறைவில்
— காக்கைச் சித்தர் (@vandavaalam_) June 4, 2022