சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ 2022-ஆம் ஆண்டு ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.
இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2 & 3’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’, இயக்குநர்கள் அன்பறிவு படம் என 5 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘தக் லைஃப்’ கமலின் கேரியரில் 234-வது படமாம்.
இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ‘ஜெயம்’ ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர். இதனை ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் – ரெட் ஜெயன்ட் மூவிஸ் – மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறதாம்.
இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானது. இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்நிலையில், இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பை வருகிற மார்ச் 1-ஆம் தேதி முதல் செர்பியாவில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.