Thug Life : கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

  • January 2, 2024 / 03:56 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ 2022-ஆம் ஆண்டு ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’, இயக்குநர் ஹெச்.வினோத் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘தக் லைஃப்’ கமலின் கேரியரில் 234-வது படமாம்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ‘ஜெயம்’ ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, அபிராமி, கெளதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் – ரெட் ஜெயன்ட் மூவிஸ் – மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறதாம். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானது. இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, இப்படத்தின் ஷூட்டிங்கை இம்மாத இறுதியிலிருந்து சென்னையில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus